Thursday 6 February 2014

ஸ்ரீ குருவின் திருப்புகழ்பாடும்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த அந்தாதி
ஸ்ரீஅருட்சக்தி குருவின் பிறந்த நாளில் (01.11.2013) பணிவுடன் படைத்தவன் நாக சுந்தரம்


அன்று அக்கண்ணன் அவதரித்தான் அழித்தான் அவம் அகிலத்தில்
இன்று நீபிறந்து எங்கள் மனமாயை மாற்றினாய் முயன்றே
கன்றாய் காசினியை கருமத்தால் உழல்வோம் கருணையுடன் கண்ணால்
என்றும் எங்கள் குருவாய் வந்தே கொள்வாய் குணம்

குணத்தினில் குன்றுநீ மனத்தகத்து மாசகன்ற மேதைநீ எந்தனுக்கு
கணத்தினில் காட்சிதந்து கடைசியில் வீடு தரும் வித்துநீ
சினத்தினில் சீறிவந்து சங்கடங்கள் தீர்ப்பதில் சாரைநீ சாந்தமுடன்
மனத்தினில் மாசுநீக்கி மலர வைப்பாய் மண்ணிலே மக்களை

மக்களுடன் மாக்களாய் மண்ணிலே தினம்தினம் பிறக்கிறோம் மீளவந்து
அக்கறை அன்புடன் அழிக்கிறாய் அறியாமை ஆண்டவா பணிகிறோம்
சொக்கநாதன் ஆடுகின்ற ஊழியாட்டம் காண வைத்தாய் எங்களை
பக்கத்திலே வந்துமே பரகதியை தருவாய் பணிகிறோம் உன்னடி

உன்னடி பணிகிறோம் உண்மையை தொழுகிறோம் உன்னருள் உன்னுவாய்
தன்னையே காண வைத்த தகைமைசால் தெய்வமே தீர்த்திடு தீமையை
அன்னை அவளின் அன்புகொண்ட ஆதிகுரு நீயலோ அறிவமே
சொன்ன சொல்லை பேணுவோம் சொந்தம்நீ சுகமும்நீ சகத்தினில்

சகத்தினில் பிறந்து பிறந்து சீர்கெடவோ வந்திட்டோம் எண்ணுவீர்
அகத்தினில் பார்க்க பார்க்க ஆண்டவன் தெரிவனே உன்னுவீர்
தகதகக்கும் ஒளியுடன் தீபஒளி நாளிலே திருவாக வந்தவர்
சிவசிவக்கும் மேனிகொண்டு சொன்னாரே சேதியை நால்வருக்கு அன்று


No comments:

Post a Comment