Tuesday 18 February 2014

கணினியின் தத்வம்

பல ஆண்டுகளுக்குமுன் கணினியின் பயன்பாட்டில் தோன்றிய தத்வங்கள். எழுதியது: நாக.சுந்தரம்

CABINET
உடல்
CPU
மூளை
MONITOR
முகம்
KEYBOARD
கைகள்
MOUSE
மனம்
WEB CAMERA
கண்கள்
OPERATING SYSTEM (OS)
பிறவி
SOFTWARE
வாஸனைகள் (வினைகள்)
INSTALLATION OF SOFTWARE
புதிய வாஸனைகள்
MEMORY
ஞாபக சக்தி
FORMAT/INSTALL
இறப்பு/பிறப்பு
INTERNET
விஷய பரிவர்த்தனைகள்
WEBSITE
உறவுகள்
SCANNING
புலன்களால் ஏற்படும் விஷயப்பதிவுகள்
PRINTER
எழுத்துக்கள்
SPEAKERS
பேச்சு
MIC
வாய்
SHUTDOWN
உறக்கம்
RESTART
கண்விழித்தல்
UPGRADATION
நற்பிறவி
UPDATES
வயதுஏறுதல்
VIRUS
தீயசிந்தனைகள்
ANTI-VIRUS SOFTWARE
தீக்ஷை
FOLDER
புத்தி
FILE NAME
அஹங்காரம்
HARD DISK
நினைவுகள்பதியும்இடம் (சித்தம்)


Thursday 6 February 2014

அருளின் அற்புதங்கள்
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
பாகம் : 2


சென்ற சில ஆண்டுளுக்கு முன் கேள்விப்பட்ட ஒரு செய்தி இது. தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் உள்ள ஸ்ரீஅப்பாவின்  சிஷ்யை ஒருவள் சாமான்கள் வாங்கிக்கொண்டு  தன் பெண்ணுடன் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அந்நேரம் அவளது ஸகோதரர் ஒருவரிடமிருந்து  (அவரும் இவரின் சீடர்) மொபையில் போன் கால் அழைத்தது. சாதாரணமாக ஸெளக்கியம் விசாரித்து விட்டு போன் நின்று விட்டது. உடனே இவளுக்கு மறுநாள் தீபாவளி யாயிற்றே! நமது குருநாதருக்கு பிறந்த நாள் அல்லவா! இதனை தன் ஸகோதரனுக்கு நினைவு படுத்தியிருக்கலாமே என எண்ணினாள். இந்த எண்ணம் தோன்றி மறைந்த அடுத்த விநாடியே ஆட்டோ எதிரில் மரத்தில் மோதி ஒரு பக்கமாக சாய்ந்து விழுந்துவிட்டது. இவளும் இவளின் பெண்ணும் கீழே உருண்டார்கள். ஆனால் அதியசம் பாருங்கள். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆட்டோ டிரைவருக்கு மட்டும் சிறிய காயம். உடன் அவளுக்கு தன் குருநாதர் நினைவுதான் வந்தது. ஏன் தெரியுமா? அவரின் நினைவை மனதில் கொண்டிருந்த நேரத்தில்தானே இந்த விபத்து நேர்ந்தது. அதனால் ஸ்ரீகுருவின் நினைவே எந்த ஆபத்தையும் நீக்கும் என்பதை நிதரிசனமாக உணர்ந்தாளாம்.

தொடரும்  அற்புதங்கள் .......... 

அருளின் அற்புதங்கள் - எழுதியவர்- நாகசுந்தரம்

அருளின் அற்புதங்கள்
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
               
                உலகில் ஸாதகர்களுக்கு ஸ்ரீகுருவின் அருள் நிச்சயம் வேண்டும் என்பது சாஸ்த்ரங்களின் முடிந்த முடிவு.  மந்த்ரத்திலும் உபாஸனையிலும் ஸித்தி ஏற்பட வேண்டுமானால் அதற்கு ஸ்ரீகுருவின் அருள் மிகவும் தேவை.  ஸ்ரீகுருவின் அருளால் தன் குருநாதராலேயே அருள்சக்தி என்று அழைக்கப்பட்ட எனது தகப்பனாரும் நமது குருநாதருமான பூஜ்யஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்கள் வாழ்க்கையில் பல பல ஆச்சர்யகரமான, அற்புதமான நிகழ்ச்சிகள் நடந்தன. நடந்தும் வருகின்றன. அவற்றில் சில எனக்கு நேரில் தெரிந்தவை. சில அம்மா சொன்னவை. சில நண்பர்கள், உறவினர்கள் மூலம் கேள்விப்பட்டது, அதனைத்தான் இதில் காணப்போகிறோம். மற்றும் நமது பரமகுருநாதர் அருள் அற்புதங்களும் இன்னும் சில மஹான்கள், ஸன்யாஸிகள் ஆகியவர்களின் அற்புத ங்களும் கூட இதில் பதிவு செய்துள்ளேன். பொருந்தினால் நான் தன்யனாவேன்.

                எனது தகப்பனார் சிறு வயது முதலே ஸித்தர்கள், மஹான்கள் இவர்களிடம் ஈடுபாடு உடையவர். எங்களின் கிராமமான நாகரசன் பேட்டையில் ஒரு ஸித்த புருஷர் - மஹான் ஸ்ரீகாரைஸித்தர் - என்பவர் வசித்து வந்தார்.  அவர் மஹா ஸித்திகள் கைவரப் பெற்றவர். அவரிடம் எனது தகப்பனார் நெருங்கி பழகி வந்தார். அதுபற்றியுள்ள பல நிகழ்ச்சிகளை பிறகு விவரிக்கிறேன். அந்த கிராமத்தில்தான் எனது தகப்பனார் தன் குருநாதரான குஹானந்தமண்டலி பூஜ்யஸ்ரீஅனந்தாநந்தநாதர் அவர்களை ஸந்திக்க நேர்ந்தது. அதன்பின்தான் இவர் ஸந்யாஸ வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருந்துவந்தவர் தன் குருநாதர் சொல்படி திருமண வாழ்க்கையில் ஈடுபட்டார். அவரது ஒரு சொல்லே- ஞான ஈடுபாட்டுடன் இருந்த தன்னை பூரணஞானவானாக, வாழையடி வாழையாக வந்து கொண்டிருக்கும் ஸ்ரீவித்யாஉபாஸனா மார்க்கத்தின் ஒரு சிறிய வாழைக்கன்றாக ஆக்கியது என்றால் மிகையில்லை என்று அடிக்கடி கூறக்கேட்டிருக்கிறேன். அதுமுதல் எனது தகப்பனார் தனது இல்வாழ்க்கையை எவ்வாறு நடத்தி வந்தார், வருகிறார் என்பதை இந்த இடத்தில் சற்று ஆதார பூர்வமாக விவரிக்க வேண்டியுள்ளது.

                ச்ருங்ககிரியில் பீடாதிபத்யம் நடத்திவந்தவரும், பலவேதாந்த க்ரந்தங்களை இயற்றியவருமான பூஜ்யஸ்ரீவித்யாரண்யஸ்வாமிகள் செய்ததான ஒரு க்ரந்தமுண்டு. அதனை பஞ்சதசீ என்ற பெயரில்  பெரியோர்கள் அறிவார்கள். அதிலே த்யானதீபம் என்ற அத்யாயத்தில் அவர் கூற்றாக சில ஸ்லோகங்களை இதில் பார்க்கப் போகிறோம்.
ஸதா காலமும் த்யானபரமாக, ஞானபரமாக ஒருவர் வாழ்கிறார் என்றால் அவரது உலக தொடர்பைப்பற்றி இங்கு ஸ்வாமிகள் விளக்குகிறார்.
புஞ்ஜானோ அபி நிஜாரப்தம் ஆஸ்தாதி சயதோ  அனிசம் !
த்யாதும் சக்தோ ந ஸந்தேஹோ விஷயவ்யஸனி யதா !!

                இதற்கு பொருள்- ஒரு ஞானி என்பவன்- தன்னுடைய ப்ராரப்தகர்மாவை அனுபவித்துக் கொண்டிருந்தபோதிலும், தனது உபாஸனை பிடிமானத்தின் பலத்தினால் எப்போதும் த்யானம் செய்து கொண்டிருக்க அவனால் முடியும். விஷய சுகங்களில் ஆஸக்தி யுள்ளவன் எப்படியிருப்பானோ அப்படியிருப்பான். இதில் கொஞ்சங்கூட ஸந்தேஹமில்லை. அதாவது விஷய சுகங்களில் ஈடுபட்டவர்கள் உண்பது, உறங்குவது, வேலை செய்வது முதலியற்றை எப்படி அனிச்சை செயலாக செய்கிறார்களோ அவ்விதமே ஆன்ம சுகத்தில் ஈடுபட்டவர்களுக்கு உலக விவகாரங்களும் அனிச்சை செயலாக இருப்ப தனால் அவர்களுக்கு அவ்விவகாரங்களினால் ஏற்படும் வினைத்தொடர்புகள் கிடையாது. அதனால் அவர்கள் ப்ரவ்ருத்தியில் ஈடுபடுவதனால் கெடுதல் ஒன்றும் ஏற்படாது.
ஏவம் த்யானைக நிஷ்டோ அபி லேசாது லௌகிகம் ஆசரேத் !
தத்வவித்தத்வவிரோதித்வாத் லௌகிகம் ஸம்யகாசரேத் !!

                இதற்கு பொருள்- த்யானத்திலே நிலைத்திருப்பவனும் உலகாயதமான கார்யத்தை ஸ்வல்பமாகவே செய்வான். தத்வமறிந்தவனோ - தத்வஞானத்திற்கு உலக கார்யம் - விரோதமில்லாததினால் உலககார்யத்தை நன்றாகவே செய்வான்.

                இவ்வாறெல்லாம் சாஸ்த்ர வாக்கியங்கள் இருப்பதால்தான் ஸ்ரீபரமகுருநாதர் இவரை இல்லறத்தில் ஈடுபடவைத்தது பொருத்தமாக உள்ளது என்பதை ஸ்ரீகுருஜியின் நடவடிக்கைளைக் கொண்டு நாம் அறிந்து கொள்கிறோம். அதனால் அவர்கள் வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்ததாக ஆனது. அதனைத்தான் இங்கு வரிசையாக விவரித்துள்ளேன். நிகழ்ச்சிகள் அத்தனையும் உண்மை. ஆனால் சில இடங்களில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடவில்லை.

                1. ஒரு நாள் கிராமத்தில் வாசலில் உட்கார்ந்து கிராம அதிகாரியின் வேலைகளில் இருந்தார் அப்பா. அப்போது ஒரு குடுகுடுப்பைகாரன் அங்கு வந்தான். எங்கள் வீட்டருகில் வந்தவன் திடீரென்று கத்திப்பேச ஆரம்பித்தான். எனக்கு நீங்கள் நிறைய ஆடை அணிகலன்கள் கொடுத்தால்தான் இவ்விடம் விட்டு நகருவேன் என்று ஆவேசத்துடன் பேசினான். பொறுமையாய் இருந்த அப்பாவை வேண்டுமென்றே வம்புக்கிழுத்தான்.  என்னிடம் என்ன உள்ளது தெரியுமா ?  இதோ பாருங்கள் என்று கூறி தன் பையில் இருந்து ஒரு கை எலும்புக்கூட்டை எடுத்துகாட்டி மிரட்டினான். அதற்கு அப்பாவும் அவனைப்பார்த்து அதை விட என்னிடம் அதிகமான சக்தி வாய்ந்த பொருள் உள்ளது.  நீ ஜடமான பொருளை கொண்டு மிரட்டுகிறாய். ஆனால் என்னிடம் உள்ள வஸ்த்துவோ சைதன்யமான வடிவம். அது உன்னை ஓடஓட விரட்டும்- என்று கூறவும், அதை என்னிடம் காட்டுங்கள் என்று அவன் கூறினான்.  அதற்கு அப்பா அதை உன்னால் பார்க்க முடியாது அஹங்காரம் உள்ள வர்களுக்கு அது தெரியாது. இப்போது பார்! -என்று கூறவும் அவன் பின்பு பயத்துடன் இவரது வீர முழக்கத்தால் சத்தமின்றி சென்று விட்டான். இந்நிகழ்;ச்சியானது ஒரு உபாஸகன் எவ்விதம் வீரத்துடன் தனது உபாஸக தெய்வத்தை திடமாக நம்பவேண்டும் என்று எடுத்துக்காட்டாக அமைந்ததுள்ளது.

              

அற்புதங்கள் தொடரும் .......


ஸ்ரீ குருவின் திருப்புகழ்பாடும்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த அந்தாதி
ஸ்ரீஅருட்சக்தி குருவின் பிறந்த நாளில் (01.11.2013) பணிவுடன் படைத்தவன் நாக சுந்தரம்


அன்று அக்கண்ணன் அவதரித்தான் அழித்தான் அவம் அகிலத்தில்
இன்று நீபிறந்து எங்கள் மனமாயை மாற்றினாய் முயன்றே
கன்றாய் காசினியை கருமத்தால் உழல்வோம் கருணையுடன் கண்ணால்
என்றும் எங்கள் குருவாய் வந்தே கொள்வாய் குணம்

குணத்தினில் குன்றுநீ மனத்தகத்து மாசகன்ற மேதைநீ எந்தனுக்கு
கணத்தினில் காட்சிதந்து கடைசியில் வீடு தரும் வித்துநீ
சினத்தினில் சீறிவந்து சங்கடங்கள் தீர்ப்பதில் சாரைநீ சாந்தமுடன்
மனத்தினில் மாசுநீக்கி மலர வைப்பாய் மண்ணிலே மக்களை

மக்களுடன் மாக்களாய் மண்ணிலே தினம்தினம் பிறக்கிறோம் மீளவந்து
அக்கறை அன்புடன் அழிக்கிறாய் அறியாமை ஆண்டவா பணிகிறோம்
சொக்கநாதன் ஆடுகின்ற ஊழியாட்டம் காண வைத்தாய் எங்களை
பக்கத்திலே வந்துமே பரகதியை தருவாய் பணிகிறோம் உன்னடி

உன்னடி பணிகிறோம் உண்மையை தொழுகிறோம் உன்னருள் உன்னுவாய்
தன்னையே காண வைத்த தகைமைசால் தெய்வமே தீர்த்திடு தீமையை
அன்னை அவளின் அன்புகொண்ட ஆதிகுரு நீயலோ அறிவமே
சொன்ன சொல்லை பேணுவோம் சொந்தம்நீ சுகமும்நீ சகத்தினில்

சகத்தினில் பிறந்து பிறந்து சீர்கெடவோ வந்திட்டோம் எண்ணுவீர்
அகத்தினில் பார்க்க பார்க்க ஆண்டவன் தெரிவனே உன்னுவீர்
தகதகக்கும் ஒளியுடன் தீபஒளி நாளிலே திருவாக வந்தவர்
சிவசிவக்கும் மேனிகொண்டு சொன்னாரே சேதியை நால்வருக்கு அன்று


Wednesday 5 February 2014

அருட்சக்தி வரலாறு

Shri Arutsakthi Nagarajan was born as the second son of Sri Ramachandraiyer and Srimathi Janaki ammal couple in a small village called Authickulam near Kumbakonam in Tamil Nadu. Sri Nagarajan as a youngster, had an inclination towards Vedanta been making divine predictions. He married Srimathi Bhuveneswari who later expressed herself as the avatar of Sri Devi. Sri Nagarajan met his Jnana Guru Sri Ananthanantha Nathar in 1967. Sri Nagarajan felt that his thirst for Jnana was full up by this meeting. Sri Nagarajan along with his wife got Poorna Dheeksha from Sri Ananthanantha Nathar at Vidyalkarupur a small village, in the bank of Kodamurutti River near Kumabkonam.
From the year 1989 when Ritanbhara Jnana Sabha was started, he with the help of some initial disciples conducted many Srividhay poojas and yagnas. From the knowledge gained during his Gurukula-training Sri Nagarajan authored many books. He participated in poojas and book releases under the patronage of Srividhya Guru Mandal Parishad. He was blessed to be called as ARUTSAKTHI by his own Gurunathar . He was honoured with the title SRIVIDHYOPASANA SRESHTA in the year 2000 by srividhya sammelanam at Chennai. He was also given the title of JNANA SORKONDAL by Ritanbhara Jnana Sabha members.

தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் ஆத்திக்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரீராமச்சந்திரஅய்யர் – ஸ்ரீமதி ஜானகியம்மாள் இவர்களின் இரண்டாவது குமாரர். இளமையிலே வேதாந்தத்தில் நாட்டமும், அருள்வாக்குகளை எழுதியும் வந்தார். ஸ்ரீமதி புவனேச்வரி என்ற பின் தேவியின் அவதாரமாக வெளிக்காட்டிய) மாதை மணம் புரிந்தார். 1967 ல் தன் ஞான குருவான ஸ்ரீஅனந்தாநந்தநாதர் அவர்களை கண்ட மாத்திரத்தில் தன் ஞான தாகம்  அடங்கினதாக உணர்ந்து, பின் அவரையே நினைத்துவந்தபோது, விடயல்கருபூர் என்ற கிராமத்தில் பத்தினியுடன் சேர்த்து பூரணதீக்ஷை பெற்றார்.  1989 முதல் தான் தொடங்கின ருதம்பரா ஞான ஸபா என்ற வேதாந்த ஸபையில்  சேர்ந்த சில சீடர்களின் துணைகொண்டு பல ஸ்ரீவித்யா பூஜைகளும், யாகங்களும் செய்துள்ளார்  தன் குருகுலவாஸத்தில் அறிந்தவைகளை கொண்டு பின அனேக நூல்கள் செய்தார்.  ஸ்ரீவித்யா குருமண்டல பரிஷத் மூலம் நூல் வெளியீட்டிலும் பூஜைகளிலும் கலந்துகொண்டுள்ளார். தன் குருநாதராலேயே அருட்சக்தி என்று கூப்பிடும் பேறு அடைந்தவர். சென்னையில் 2000 ல் நடந்த ஸ்ரீவித்யா ஸம்மேளனத்தில் ஸ்ரீவித்யோபாஸனச்ரேஷ்ட என்ற விருதையும், தன் ருதம்பரா ஞான ஸபாவினரால் ஞானசொற்கொண்டல் என்ற விருதையும் பெற்றவர்.

Srimathi Janaki Ramachandran, Mother of Sri Arutsakthi Nagarajan.

Her birth place is Authikkulam village. Srimathi Janakiammal lived a vedantic life amidst familial responsibilities. Sri Nagarajan’ s vedantic moorings can be attributed to the upbringing of his mother rooted in vedantic principles. Srimathi Janakaiammal reached her heavenly abode in 1987. Srimathi Janakiammal’s father and the grand sire of Tamil Thatha Dr. U.Ve Saminatha iyer were first cousins.

Parents history

His Father Sri Ramachandra Iyer was a village karnam at Payathancheri near Needamangalam. Both of his parents were born in the village of Authickulam. They were blood relatives too. He attained the lotus feet of the lord in 1960.

ஆத்திக்குளத்தில் பிறந்தவர். தன் வாழ்நாளில், குடும்பச் சூழ்நிலைகளிலும் வேதாந்தமாக வாழ்ந்தவர். ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்கள் இளமை தொட்டு வேதாந்த ஞானம் அடைந்தவராக இருந்தார் என்றால் அதற்கு காரணம் இவர்களுடைய வளர்ப்பு முறைதான்.