Thursday 20 March 2014

அருளின் அற்புதங்கள் தொடர் 
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
பாகம் :5


சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பா அவர்கள் வழக்கம் போல் தான் எழுதும் அருள்வாக்குகளுக்கு மத்தியில் ராஸலீலையும் ஆத்மானந்தமும் என்ற தலைப்பில் ஒன்று எழுதினார்கள் . அதில் ஸ்ரீமத்பாகவத புராணத்தில் கண்ணனின் தலையான லீலையான ராஸலீலையே நாம் நமது ஸ்ரீவித்யா ஸபர்யையில் செய்யும் ஆச்சர்யாஷ்டோத்தர சதநாமாவளியின் தத்துவார்த்தம் என்று ஸித்தாந்தமும் செய்துள்ளார்கள். மேலும் இந்த ராஸக்ரீடையின்  தத்துவம் தான்  ஸன்யாஸயோகம்  என்று எழுதியுள்ளார்கள். நான் அதனை படிக்கும் காலத்தில் இந்த இடத்தில் எனக்கு சற்று ஸந்தேஹம் இருந்தது. ஆனால் அதனை அப்பாவிடத்தில் இதுபற்றி கேட்டவனில்லை. ஏனெனில் அவருளால் இதற்கு நமக்கு விளக்கம் அவரே ஒருநாள் கொடுப்பார் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் பாருங்கள் அடுத்த சில தினங்களில் தொலைக்காட்சியில் குரவைகூத்து என்ற தலைப்பில் ராஸலீலை பற்றி பேசின ஒருவர் கூறினார்:  ஸ்ரீமத்பாகவதத்திலுள்ள ராஸபஞ்சாத்யாயீ என்கிற 5 அத்தியாயங்கள் கோபிகைகளுடன் கண்ணன் நிகழ்த்தின அதிஅத்புதமான வைபவங்கள். நாராயணபட்டத்திரி அவர்களும் தன் நாராயணீயத்தில் இதுபற்றி 5 ஸ்லோகங்கள் பதிவு செய்துள்ளார். ஒரு மனிதன் ஸன்யாஸம் ஏற்றுக்கொள்ளும்போது இந்த பாகவத பாகத்தை அவசியம்  படிப்பார்கள் என்ற கூறினார். இப்போது முன் எனக்கிருந்த ஸந்தேஹம் இதனால் சற்று நீங்கிற்று. ஆனால் நான் இங்கு சொல்ல வந்தது - நமது குருநாதரின் தீர்க்கமான புராணஞானம் பற்றித்தான். அவர் தான் அருள்வாக்குகள் எழுதும் நேரத்தில் அதற்கு ஆதாரமாக அச்சமயம் எந்த  நூலையும் அருகில் வைத்துக் கொண்டதில்லை. பலமுறை அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்கள், நான் எழுதிவருவேன். அப்போதும் அவரின் கையில் எந்தஆதாரமும் இருக்காது. ஆனால் சில சமயம் தான் சொல்லும் விஷயத்துக்கு சம்பந்தமில்லா புத்தகம் அவர்கள் கையில் இருக்கும். அவர் எப்போதோ சொன்னது இப்பால் தொலைக்காட்சியில் குரவைகூத்து என்ற தலைப்பில் ஒருவர் அதனை உறுதி செய்கிறார் என்பதைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.


பாகம் : 6


இதன் தொடர்ச்சியாக வேறு ஒரு செய்தியையும் கூறவேண்டியுள்ளது.  இது அப்பாவே என்னிடமும் மற்றம் சில சீடர்களிடமும் சொன்ன விஷயம் தான். 1975 ம் ஆண்டில் தன் குருநாதரிடத்தில் ஸ்ரீசியாமளா தண்டகம் என்ற காளிதாஸனின் ஸ்லோகங்களுக்கு  தான் எழுதியதாக ஒரு விளக்கவுரையை காட்டியுள்ளார்கள். அதனை அவர் படிக்கும் படி சொல்லியுள்ளார். இவர்கள் படிக்கத்தொடங்கி முதலில் கடவுள் வணக்கமாக தான் எழுதிய ஒரு ஸ்லோகத்தை படித்தாராம். அது-
                சாந்தம் சிவமத்வைதம் சதுர்த்தம்
                மன்யந்தே ஸ ஆத்மா விக்ஞேய:
இதனை பரமகுருநாதர் செவி மடுத்தவுடன் -
நிறுத்து, நிறுத்து, இது எங்கே உள்ளது? எதனைப் பார்த்து எழுதினாய்?
என்ற கேட்டாராம்.
அதற்கு-
தான் எந்த ஆதாரபுத்தகமும் என்னிடம் இல்லை. ஏதோ தோன்றினது எழுதினேன்
-என்றாராம். அதற்குமேல் அவர்கள் எதுவும் சொல்லாமல் சிறிதுநேரம் மௌனமாக இருந்துவிட்டு பின் சொன்னார்களாம்.
இது மாண்டூக்ய உபநிஷதத்தில் உள்ள வாக்கியம். உனக்கு எப்படி தெரிந்தது
என்று கேட்டாராம்.
தான் எந்த உபநிஷதமும் படித்தவனில்லை என்றும் அவ்வாறு ஒரு உபநிஷதம் உள்ளது என்பதே தாங்கள் இப்போது கூறியபின்தான் எனக்குத் தெரியும் .
-என்றும் சொன்னாராம்.
நீ முன் ஜன்மத்தில் இதனை படித்திருக்கிறாய். அதுதான் இப்போது ஞாபகத்துக்கு வந்துள்ளது.
-என்று விளக்கம் சொன்னார்களாம்.
எனவே நான் முன்பு ராஸலீலை பற்றி சொன்ன விஷயம் இதன் அடிப்படையில் தான் நேர்ந்திருக்கிறது என்று தான் முடிவுக்கு வருகிறோம்.


தொடரும் அற்புதங்கள் :.......

No comments:

Post a Comment