Tuesday 18 March 2014

அருளின் அற்புதங்கள் தொடர் 
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
பாகம் : 2

சென்ற சில ஆண்டுளுக்கு முன் கேள்விப்பட்ட ஒரு செய்தி இது. தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் உள்ள அப்பாவின்  சிஷ்யை ஒருவள் சாமான்கள் வாங்கிக்கொண்டு  தன் பெண்ணுடன் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அந்நேரம் அவளது ஸகோதரர் ஒருவரிடமிருந்து  (அவரும் இவரின் சீடர்) மொபையில் போன் கால் அழைத்தது. சாதாரணமாக ஸெளக்கியம் விசாரித்து விட்டு போன் நின்று விட்டது. உடனே இவளுக்கு மறுநாள் தீபாவளி யாயிற்றே! நமது குருநாதருக்கு பிறந்த நாள் அல்லவா! இதனை தன் ஸகோதரனுக்கு நினைவு படுத்தியிருக்கலாமே என எண்ணினாள். இந்த எண்ணம் தோன்றி மறைந்த அடுத்த விநாடியே ஆட்டோ எதிரில் மரத்தில் மோதி ஒரு பக்கமாக சாய்ந்து விழுந்துவிட்டது. இவளும் இவளின் பெண்ணும் கீழே உருண்டார்கள். ஆனால் அதியசம் பாருங்கள். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆட்டோ டிரைவருக்கு மட்டும் சிறிய காயம். உடன் அவளுக்கு தன் குருநாதர் நினைவுதான் வந்தது. ஏன் தெரியுமா? அவரின் நினைவை மனதில் கொண்டிருந்த நேரத்தில்தானே இந்த விபத்து நேர்ந்தது. அதனால் குரு நினைவே எந்த ஆபத்தையும் நீக்கும் என்பதை நிதரிசனமாக உணர்ந்தாளாம். 

பாகம் : 3


 அப்பா  தொடர்பும் பக்தியும் வைத்திருந்த ஸித்தமஹான் ஸ்ரீகாரைசித்தர் 1964 ஆகஸ்டு 24 ல் கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் மதுக்கரையில் ஸித்தி யடைந்தார்கள். அவர்களின் அஸ்தியை அவர் ஸித்திகள் புரிந்துவந்த சாந்தவெளி ஸ்ரீஆஞ்ஜனேயர் ஸந்நிதிக்கு பின்புறம் ஸ்தாபித்து ஒரு மண்டபமும், அதில் அவரின் திருவுருவச்சிலையையும் பக்தர்கள் உண்டாக்கினார்கள். அதன்பின் அப்பாவின் மனதிலும், வாழ்க்கையிலும் சில மாறுதல்கள் ஏற்பட்டன. அப்போது அப்பாவுக்கு ஸ்ரீவித்யா பற்றி எதுவும் தெரியாது. அதாவது திடீரென அவர் நினைவிழந்து விடுவார்களாம். அச்சமயம் அவரது வாய் முணுமுணுக்கத் தொடங்கும். அவர் சொல்வதை என் பெரியப்பா அப்படியே எழுதிவைத்து விடுவார்களாம். அந்த விஷயங்கள் அத்தனையும் வேதாந்த பரமாகவும், மந்த்ர சாஸ்த்ர பரமாகவும், சில புராண கதைகள் பற்றியதாகவும் இருந்துவந்தன. அந்நாட்களில் அப்பாவிடம் அவரரியாமலேயே சில ஸித்திகள் கைகூடி யிருந்தனவாம். இதனை என் பெரியப்பா என்னிடம் கூறியுள்ளார்கள். தான் உணவு உண்ணும்போது பல சமயம் உணவு வகைகளை அதாவது காய், கூட்டு, சாம்பார், சாதம் அத்தனையையும் ஒன்றாக பிசைந்து சாப்பிடுவாராம். தனக்குதானே நினைவில் ஆழ்ந்து த்யானஸமாதியில் இருப்பாராம். அத்துடன் நில்லாமல் இந்த அருள்வேளை நேரத்தில் பலவிதமான பூஜா விவரங்களை கூறி அந்த ஊரில் உள்ள திருக்கோயில் அம்பாள் ஸ்ரீநித்ய கல்யாணசுந்தரிக்கு ஒரு நவசக்தி அர்ச்சனை செய்யப்பணித்திருக்கிறார். அதுவும் மிகச்சிறப்பாக பலருடைய உதவியினால் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் தன் எதிரில் உள்ள மனிதர்களின் மனதில் நினைக்கும் விஷயங்களை கூறி அசத்துவார்களாம். இதனால் இவரின் எதிரில் வருவ தற்குக்கூட மற்றவர்கள் அச்சப்படும் நிலை உருவானது. இதனை அப்பாவே தன்னளவில் உணர்ந்து ஒரு நாள் அம்பாள் ஸந்நிதியில் தனக்கு அத்தகைய ஸித்தி கைவரக்கூடாது எனவும், அத்தகைய ஸித்தி என்னிடம் உள்ளது என தானே உணரக்கூடாது எனவும் மிகவும் மனவருத்தத்துடன் கதறி வேண்டியிருக்கிறார். இதற்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவர்களின் அருள்வாக்குகளை படித்து வந்ததே காரணம் என்று கூறுவார்கள். அதன் பின் சில மாதங்களிலேயே அவர் தன் குருநாதரை சந்திக்கும் படி திருவருள் கூட்டியிருக்கிறது. அவரிடம் இத்தகைய ஸித்தி தனக்கு உள்ளது எனக் கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் அதனை நீ மறந்து விடு என அறிவுரை சொன்னார்களாம். இதன்னியில் அப்போதெல்லாம் அப்பாவுக்கு தன் இடது கையிலிருந்து திடீரென குங்குமம் அல்லது சந்தனப்பொடி கிடைக்கும். இதுபோல் பலமுறை பலநாட்கள் முன்பு நடைபெற்று வந்துள்ளது. பிறகு தன் குருநாதரை சந்தித்தபின்பு அவரின் அறிவுரையும் அனுக்கிறஹமும் அவரிடமிருந்து அத்தகைய சக்தி நாளடைவில் குறையத் தொடங்கிற்றாம். எங்களுக்குத்தெரிந்து இந்நாட்களில் பலமுறை கூட அத்தகைய சந்தனப்ரஸாதம் பெற்றிருக்கிறோம். இது எல்லாமே அவர்களின் எண்ணப்படி ஸித்தரின் தொடர்பே இத்தகைய சக்தியும் ஸித்தியும் தனக்கு வருவதற்கு காரணம் என்று சொல்லியிருக்கிறார்.
contd........ 

No comments:

Post a Comment